நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்


நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
x

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு உள்ளன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது ஆகும்.

விண்ணப்பங்களை நாமக்கல் கல்வி அலுவலருக்கு deonkl1962@gmail.com என்கிற முகவரியிலும், திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலருக்கு deeonamakkal@gmail.com என்கிற முகவரியிலும் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


1 More update

Next Story