தீபாவளிக்கு சொந்த ஊர் போக திட்டமா ? - அரசுப் பஸ்களில் முன்பதிவு தொடங்கியது...!


தீபாவளிக்கு சொந்த ஊர் போக திட்டமா ? - அரசுப் பஸ்களில் முன்பதிவு தொடங்கியது...!
x

தீபாவளி பண்டிகையொட்டி அரசு விரைவுப் பஸ்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் 'டிக்கெட்' முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இதன்மூலம் கடைசிகட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் பயணிகள் முன்கூட்டியே தங்கள் இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (அக்டோபர் 24-ந்தேதி) சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். அதன்படி பஸ்களில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் அக்டோபர் 21-ந்தேதிக்கான ஆன்லைன் மூலம் 'டிக்கெட்' முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக 'டிக்கெட்'டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.




Next Story