செங்கல்பட்டு: ராணுவ வாகனம் ஏரியில் கவிழ்ந்து விபத்து - 2 வீரர்கள் காயம்


செங்கல்பட்டு: ராணுவ வாகனம் ஏரியில் கவிழ்ந்து விபத்து - 2 வீரர்கள் காயம்
x

செங்கல்பட்டு அருகே ராணுவ வாகனம் ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி சூடும் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பயிற்சி பள்ளியின் குடிநீர் தேவைக்காக அஞ்சூரில் உள்ள குழாயில் ராணுவ டேங்கர் லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு ராணுவ வீரர்கள் மீண்டும் அனுமந்தபுரம் நோக்கி சென்றனர்.

அஞ்சூர் ஏரிக்கரையில் டேங்கர் லாரி வந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த 2 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அஞ்சூர் ஏரிக்கரையில் தரமற்ற நிலையில் போடப்பட்ட சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது என ராணுவ வீரர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story