விவசாயியை மிரட்டிய 2 பேர் கைது


விவசாயியை மிரட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2023 12:30 AM IST (Updated: 8 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). விவசாயி. இவர் காரில் சூளகிரி அருகே மேலுமலை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரை முந்தி செல்ல முயன்றனர்.

மேலும் கார் செல்ல இடையூறு செய்ததாக தெரிகிறது. இதனை தட்டி கேட்ட செந்தில்குமாரை அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில்குமார் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி செந்தில்குமாரை மிரட்டிய ஆவல்நத்தம் பகுதியை சேர்ந்த கேசவன் (வயது 20), அன்பழகன் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story