கொண்டலாம்பட்டி அருகே நகைக்கடை உரிமையாளரிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது


கொண்டலாம்பட்டி அருகே நகைக்கடை உரிமையாளரிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 15 July 2023 4:47 PM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டி அருகே நகைக்கடை உரிமையாளரிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). சிவதாபுரம் சித்தர் கோவில் மெயின் ரோட்டில் வெள்ளி நகை கடை வைத்துள்ளார். இவரும், அவருடைய மனைவியும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்மநபர்கள் கணவன்- மனைவி இருவரையும் தாக்கி 8½ கிலோ வெள்ளி, ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கந்தம்பட்டியை சேர்ந்த தமிழ்ஜீவன் (27) என்பவரை வழிப்பறி வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவர், தன்னுடைய கூட்டாளிகள் தாதகாப்பட்டியை சேர்ந்த சிவா, சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஷ், அன்னதானப்பட்டியை சேர்ந்த நவீத் ஆகிய 3 பேருடன் சேர்ந்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கைதானவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story