தர்மபுரியில்கஞ்சா விற்ற 3 பேர் கைது
தர்மபுரி:
தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி சோகத்தூர் மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் தர்மபுரியை சேர்ந்த காளிதாஸ் (வயது 27), புகழேந்தி (27), கவியரசு (26) என்பதும், பைகளில் 1 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire