பாலக்கோடு அருகேமின்சாரம் பாய்ச்சி காட்டுப்பன்றியை வேட்டையாடிய தந்தை-மகன் கைது
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவுரன் (வயது58). இவரது மகன் ராம்குமார் (32). விவசாயிகளான இவர்கள் நிலத்தை சுற்றிலும் மின்கம்பி அமைத்து இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுப்பன்றி ஒன்று விவசாய நிலத்தில் புகுந்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி காட்டுப்பன்றி இறந்தது. இதையடுத்து தந்தை-மகன் 2 பேரும் காட்டுப்பன்றியை சமைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து பாலக்கோடு வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று காட்டுப்பன்றியை வேட்டையாடிய தந்தை-மகன் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இறைச்சி, மின் ஒயர், கம்பி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story