தர்மபுரி உழவர் சந்தையில் செல்போன் திருடிய வட மாநில திருடன் கைதுகூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை


தர்மபுரி உழவர் சந்தையில் செல்போன் திருடிய வட மாநில திருடன் கைதுகூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 July 2023 1:00 AM IST (Updated: 30 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி உழவர் சந்தையில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த செல்போன் திருடன் கைது செய்யப்பட்டான். அவனிடம் கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் திருட்டு

தர்மபுரி உழவர் சந்தைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், ஏராளமான ெபாதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த உழவர் சந்தையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தினமும் பொதுமக்களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்கள் திருட்டு போனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 8 பேரிடம் விலை உயர்ந்த செல்போன் திருட்டு போனது. இது குறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ம.க. பிரமுகர் ஒருவரின் ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டுப்போனது. அந்த செல்போனில் உள்ள ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து பரிசோதித்ததில் அந்த செல்போன் தர்மபுரி உழவர் சந்தையில் இருந்து பஸ் நிலையம், நல்லம்பள்ளி, டோல்கேட், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், சென்னை கொண்டு செல்லப்பட்டு மறுநாள் விமானம் மூலம் மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள துர்காப்பூர் விமான நிலையம் கொண்டு ெசல்லப்பட்டது தெரியவந்தது.

இதனால் தர்மபுரி பகுதியில் திருட்டு போகும் செல்போன்கள் மேற்கு வங்காள மாநிலத்திற்கு ஒரு கும்பல் தொடர்ந்து கடத்தி வருவது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேற்குவங்காள வாலிபர் கைது

இந்த நிலையில் நேற்று காலை தர்மபுரி உழவர் சந்தைக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் விஜயகுமார் என்பவர் காய்கறிகள் வாங்கி கொண்டிருந்தபோது, அவ ரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை ஒருவர் திருடி உள்ளார். இதைப்பார்த்த விவசாயிகள், அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்து டவுன் ேபாலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகுல் (வயது 20) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தியதில் மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த சிலர் உழவர் சந்தைக்கு வருேவார்களிடம் செல்போன் திருடுவதையே தொழிலாக செய்து வந்துள்ளனர். அவர்கள் இவ்வாறு திருடும் செல்போன்களை சிலரிடம் கொடுப்பதும், அவர்கள் மறு நாளிலேயே வட மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவனை கைது செய்த போலீசார் கூட்டாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று செல்போன் திருடிய மேற்கு வங்காளத்தை சேர்ந்த அந்த வாலிபர் கடந்த 3 நாட்களாக உழவர் சந்தைக்கு வந்து சென்றுள்ளார். அவனைப்பார்த்து சந்தேகம் அடைந்த விவசாயிகள் மற்றும் உழவர் சந்தை ஊழியர்கள் நேற்று செல்போன் திருடிய போது கையும் களவுமாக பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story