செலவுக்கு பணம் கொடுக்காததால்தங்கையை கொல்ல முயன்ற அண்ணன் உள்பட 3 கைது


செலவுக்கு பணம் கொடுக்காததால்தங்கையை கொல்ல முயன்ற அண்ணன் உள்பட 3 கைது
x
தினத்தந்தி 30 July 2023 1:00 AM IST (Updated: 30 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். துணி வியபாரி. இவரது மனைவி மீனாட்சி (வயது46). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பர்கூர் அருகே உள்ள பெருகோப்பனப்பள்ளியை சேர்ந்த மீனாட்சியின் அன்ணன் கோகுலகிருஷ்ணன் (47). இவர் அடிக்கடி மாட்லாம்பட்டியில் உள்ள தங்கை மீனாட்சியிடம் செலவுக்கு பணம் வாங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று கோகுலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களான சென்னையை சேர்ந்த லோகநாதன் (32), தாமோதரன் (20) ஆகியோருடன் மாட்லாம்பட்டியில் உள்ள தங்கையின் வீட்டுக்கு வந்து செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் நண்பர்களுடன் சேர்ந்து மீனாட்சியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து மீனாட்சி காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர் இதனிடையே பர்கூர் அருகே உள்ள ஓட்டலில் பதுங்கி இருந்த கோகுலகிருஷ்ணன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story