மாவட்டத்தில்மதுபாட்டில்கள், போதைப்பொருட்களை பதுக்கி விற்ற 62 பேர் கைது


மாவட்டத்தில்மதுபாட்டில்கள், போதைப்பொருட்களை பதுக்கி விற்ற 62 பேர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2023 1:00 AM IST (Updated: 8 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்கள், போதைப்பொருட்களை பதுக்கி விற்ற 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுபாட்டில்கள்

தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை ஆகியவற்றை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 62 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன சோதனை

இதேபோல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் மேற்கொண்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல் தொடர்பாக மொத்தம் 72 பேர் வாகன சோதனையில் சிக்கினார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.


Next Story