காரிமங்கலம் அருகேபணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
காரிமங்கலம்:
காரிமங்கலம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரிமங்கலம் கும்பாரஅள்ளி சோதனைச்சாவடி அருகே நண்பர்கள் மனமகிழ் மன்றத்தில் சூதாடுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சூதாடிய 12 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பையம்பாட்டியானூரை சேர்ந்த முருகனாதன் (வயது43), அரசம்பட்டி சிவலிங்கம் (50), இடைபையூர் செந்தில் (44), நரசியர்குளம் பழனிமுத்து (51), சின்னகரடியூர் சின்னதுரை (49), பண்ணந்தூர் ஜெயபிரகாஷ் (43), குடிமேனஅள்ளி பரமசிவம் (39), பெரியம்பட்டி வடிவேல் (53) காரிமங்கலம் ஈ.பி. ஆபீஸ் பகுதியை சேர்ந்த பாலு (40), பெரியம்பட்டி மணி (34), பூபதி (52), பொம்மஅள்ளி முருகேசன் (45) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.34 ஆயிரம், 11 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.