பெண் போலி டாக்டர் கைது


பெண் போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2023 1:00 AM IST (Updated: 15 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

அ.பள்ளிப்பட்டியில் பெண் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

கிளினிக்கில் சோதனை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அருண், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி மற்றும் மருந்துகள் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய போலி மருத்துவர் தடுப்பாய்வு குழுவினர் நேற்று அ.பள்ளிப்பட்டியில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிளினிக்கில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மணி மனைவி முனியம்மாள் (வயது 36) என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி போட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர் போலி டாக்டர் என்பது தெரிந்தது.

போலி டாக்டர் கைது

இதையடுத்து கிளினிக்கில் இருந்து ஆங்கில மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மருத்துவ அலுவலர் அருண் அ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் முனியம்மாளை கைது செய்தார்.


Next Story