அரூர் அருகே ஆடு திருடியவர் கைது
தர்மபுரி
அரூர்:
அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார் (வயது 26). விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வந்தார். இவருடைய பட்டியில் இருந்து ஒரு ஆடு திடீரென மாயமானது. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் புழுதியூரில் நேற்று நடந்த சந்தைக்கு உத்திரகுமார் சென்றார். அப்போது பட்டியில் இருந்து மாயமான ஆட்டை ஒருவர் விற்பனைக்கு கொண்டு வந்து இருப்பது தெரியவந்தது. அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் பே.தாதம்பட்டியை சேர்ந்த ஆனந்தன் (43) என்பதும் அவர் ஆட்டை திருடயதும் தெரியவந்தது. இதுதொடர்பாக உத்திரகுமார் கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story