விவசாயியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகே உள்ள பெரியாகவுண்டனூரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் கதவணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (25), தென்னரசு (32) ஆகிய 2 பேரும் டீக்கடைக்கு குடிபோதையில் வந்தனர். பின்னர் அவர்கள் டீக்கடையில் இருந்த அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சதீஷ், தென்னரசு சேர்ந்து அண்ணாமலையை கல்லால் தாக்கினார்களாம். இதுகுறித்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், தென்னரசு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire