பாலக்கோடு பகுதியில்பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பாலக்கோடு:
பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொட்டம்பட்டி சுடுகாட்டில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 45), மாதேஷ் (46), சின்னசாமி (55), மாதேஷ் (32), சிவசக்தி (27), லோகேஷ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுக்கள், 3 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





