கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2023 1:00 AM IST (Updated: 6 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் குமார் தலைமையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏம குட்டியூரில் சாலை ஓரத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் வெங்கட்டம்பட்டியைச் சேர்ந்த சின்னராஜ் (வயது 45), உங்கரான அள்ளியைச் சேர்ந்த சரவணன் (25) என்பது தெரிய வந்தது. 2 பேரும் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு ப்பதிவு செய்த மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கிடைத்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story