வங்கி பெண் ஊழியரிடம் தகராறு; அரசு பள்ளி காவலர் கைது


வங்கி பெண் ஊழியரிடம் தகராறு; அரசு பள்ளி காவலர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2023 1:00 AM IST (Updated: 19 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

வங்கி பெண் ஊழியரிடம் தகராறாரில் ஈடுபட்ட அரசு பள்ளி காவலர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் மஜித் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா (வயது 28). இவர் பென்னாகரத்தில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பென்னாகரம் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). அரசு பள்ளி இரவு காவலாளி. சம்பவத்தன்று இவர் பவித்ராவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் பென்னாகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு கோவிந்தராஜை கைது செய்தனர்.


Next Story