கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது


கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2023 1:00 AM IST (Updated: 20 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தர்மன் சென் (வயது 40). இவர் குடும்பத்துடன்பாப்பிரெட்டிப்பட்டியில் தங்கி காலணி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (38) என்பவர் கடைக்கு வந்து காலணி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணன் கடையில் இருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பாலகிருஷ்ணன், வினோத்குமார் என்பவரை அழைத்து வந்து தர்மன் சென்னை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன், வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.


Next Story