கடத்தூர் அருகேதுணிக்கடை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது


கடத்தூர் அருகேதுணிக்கடை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2023 1:00 AM IST (Updated: 21 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடத்தூரை சேர்ந்த வல்லரசு (25), வேலு( 33), கவியரசு (31), ஆனந்த் (31) ஆகிய 4 பேரும் சதீஷ்குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் அவர் லேசான காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லரசு, ஆனந்த், வேலுஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story