மொபட் திருடிய எலக்ட்ரீசியன் கைது


மொபட் திருடிய எலக்ட்ரீசியன் கைது
x

வெப்படை அருகே மொபட் திருடிய எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

வெப்படை அடுத்த பாதரையில் அரசு மதுபான கடையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆனங்கூர் பகுதியை சேர்ந்த சீரங்க கவுண்டர் (வயது 70) என்பவர் தனது மொபட்டில் அங்கு வந்து மதுபாட்டில் வாங்கினார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது மொபட் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சீரங்க கவுண்டர் வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் ஏட்டுக்கள் குணசேகரன், கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மொபட் திருடிய மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் ஈக்காட்டூர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் முருகேசன் (51) என்பவர், சீரங்க கவுண்டர் மொபட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகேசன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து போலீசார் மொபட் பறிமுதல் செய்தனர்.


Next Story