சமூக வலைதளத்தில் நகராட்சி தலைவர் குறித்து ஆபாச பதிவு


சமூக வலைதளத்தில் நகராட்சி தலைவர் குறித்து ஆபாச பதிவு
x

பள்ளிபாளையத்தில் சமூக வலைதளத்தில் நகராட்சி தலைவர் குறித்து ஆபாச கருத்துகளை பதிவிட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் நகர மன்ற தலைவராக உள்ளவர் செல்வராஜ். பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 40). இவர் ஆட்டோ டிரைவர். இந்தநிலையில் இவர், நகர் மன்ற தலைவர் செல்வராஜ் குறித்து கடந்த ஓராண்டாக தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களையும், ஆபாசவார்த்தைகளையும் பதிவேற்றம் செய்து வந்தார். இதுகுறித்து செல்வராஜ், கோபாலிடம் பலமுறை கூறியும் கேட்காமல் அவதூறாக பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து செல்வராஜ் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுமார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கோபால் மீது வழக்குப்பதிந்து கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story