124 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது


124 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
x

124 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை


மதுரை அவனியாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, உதவி கமிஷனர் ரமேஷ் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவனியாபுரம் பெரியார் நகர் அருகே சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது, அதில் 124 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரில் வந்த அய்யர்பங்களா பகுதியை சேர்ந்த ராஜா (வயது42), தத்தனேரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த பாலமுருகன் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தி வந்த குட்கா பொருட்களையும், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றையும், காரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story