ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
ஆத்தூர்:
ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே கண்ணாடி மில் தெருவில் சரக்கு வாகனத்தில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் ஆத்தூரில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளி (வயது 27), ராஜா (41), கேசவன் (45), மணிகண்டன் (40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சரக்கு வாகனம் மற்றும் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story