தொழிலாளியை தாக்கிய செங்கல் சூளை உரிமையாளர் கைது


தொழிலாளியை தாக்கிய செங்கல் சூளை உரிமையாளர் கைது
x

தொழிலாளியை தாக்கிய செங்கல் சூளை உரிமையாளர் கைது

நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே மல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருடைய செங்கல் சூளையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த நாகமுத்து மகன் விஜி (25), அவருடைய மனைவி பழனியம்மாள் (21) ஆகியோர் கடந்த 7 மாதங்களாக செங்கல் அறுக்கும் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜி, உரிமையாளர் முருகன் ஆகியோர் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்தகராறு ஏற்பட்டது. இதில் முருகன், விஜியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த விஜி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் நேற்று காலை வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.


Next Story