திருமாவளவன் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு: விஸ்வ இந்து பரிஷத் கோட்ட பொறுப்பாளர் கைது
திருமாவளவன் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு: விஸ்வ இந்து பரிஷத் கோட்ட பொறுப்பாளர் கைது
நாமக்கல்
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 38). விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய கோட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பி வந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பள்ளிபாளையம் போலீசார் சபரிநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியதாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story