லாரி டிரைவரை தாக்கியவர் கைது


லாரி டிரைவரை தாக்கியவர் கைது
x

மோகனூர் அருகே லாரி டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் அருகே உள்ள கீழ் பாலப்பட்டி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 32). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனசேகரன் நேற்று முன்தினம் கீழ் பாலப்பட்டி கால்நடை மருத்துவ நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் (26) மற்றும் 5 பேர் சேர்ந்து தனசேகரனை இங்கு ஏன் வந்தாய் எனக்கூறி தாக்கினர். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதை தொடர்ந்து தனசேகரன் மோகனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோகனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், நடராஜன் வழக்குப் பதிவு செய்து கோகுல்ராஜ் என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடி 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story