இளம்பெண் தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் கைது


இளம்பெண் தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் கைது
x

பள்ளிபாளையத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பெண் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன்சாமி (வயது 32). திருப்பூரில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மார்க்கெட் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகள் அபிராமிக்கும் (31) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அபிராமி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து பள்ளிபாளையத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்த அபிராமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சீனிவாசன் மற்றும் உறவினர்கள் தனது மகள் சாவுக்கு கணவர் ராகவேந்திரன் சாமி மற்றும் அவர்களின் தந்தை சந்தர், தாய் நாகம்மாள் மற்றும் நாத்தனார் தீபா தான் காரணம் என கூறினர். பின்னர் அவர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தற்கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கைது

இதையடுத்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி மற்றும் உதவி கலெக்டர் கவுசல்யா ஆகியோர் விசாரணை செய்தனர். விசாரணையில் அபிராமியின் செல்போனில் இருந்த தகவல்களை வைத்து அவருடைய மாமனார் சுந்தர் மற்றும் மாமியார் நாகம்மாள் ஆகிய 2 பேர் மீதும் போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் விசாரணை செய்து தலைமறைவான தீபாவை தேடி வருகின்றனர்.


Next Story