கிருஷ்ணகிரி மாவட்டத்தில்குட்கா விற்ற 9 பேர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அதிரடியாக கடைகளில் சோதனை நடத்தினர். இதில் குட்கா விற்ற சூளகிரி ஒமதேப்பள்ளி மல்லேசன் (வயது 29), சாமனூர் முருகன் (42), ஜெகதேவி அகமது பாஷா (48), கார்த்திகேயன் (48), பர்கத் (37), வேப்பனப்பள்ளி அரியனப்பள்ளி நாகராஜ் (30), உப்பாரப்ள்ளி ரமேஷ் (36), உளிவீரனப்பள்ளி சுரேஷ் 46), தளி பர்வதம்மா (63) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8,700 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story