கல்லூரி உதவியாளருக்கு அரிவாள் வெட்டு

சேந்தமங்கலம் அருகே கல்லூரி உதவியாளரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்
எருமப்பட்டி கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 20). பெரம்பலூரில் உள்ள ஒரு கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் செல்வா என்பவருக்கும் முத்துக்காப்பட்டி அருகே உள்ள மேதரமாதேவி கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி சேந்தமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மதன்ராஜ் அவரது நண்பர்கள் பூபதி, கண்ணனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வடுகப்பட்டி அருகே சென்றபோது அங்கு திடீரென்று ஓடிவந்த மேதிரமாதேவி கிராமத்தைச் சேர்ந்த பட்டாணி ராஜா, மணி, தேவநாதன் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மதன்ராஜை, முன்விரோத சம்பவம் காரணமாக பீர் பாட்டிலால் குத்தினர். மேலும் அவா்கள் வைத்திருந்த பட்டா கத்தியால் அவரது தலையில் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மதன்ராஜ் சேந்தமங்கலம் போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மணி என்கிற மணிகண்டன் (22) என்பவரை கைது செய்தனர். தலைமறைவான 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.






