போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல்; வாலிபர் கைது


போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 March 2023 7:00 PM GMT (Updated: 30 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது பொம்மிடி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சேகர் ஏட்டுக்கள் சுதேஷ்குமார், வைரவேல், சக்திவேல் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த தங்கராஜ், காந்தி, ரமேஷ் (வயது 32) ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது ஏட்டு சுதேஷ்குமார் அவர்களிடம் சென்று சண்டை போடாமல் அமைதி காக்கும்படி கூறினார். ஆனால் ரமேஷ் அதனை பொருட்படுத்தாமல் ஏட்டு சுதேஷ்குமாரை தகாத வார்த்தையால் திட்டி அவரை கீழே தள்ளி தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் பாப்பிரெட்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சுதேஷ்குமார் பொம்மிடி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தார்.


Next Story