மாரண்டஅள்ளி ஏ.டி.எம். மையங்களில்பொதுமக்களை ஏமாற்றி நூதன திருட்டில் ஈடுபட்ட தொழிலாளி கைது


மாரண்டஅள்ளி ஏ.டி.எம். மையங்களில்பொதுமக்களை ஏமாற்றி நூதன திருட்டில் ஈடுபட்ட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 23 April 2023 12:30 AM IST (Updated: 23 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்களை ஏமாற்றி நூதன வகையில் பணம் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நூதன திருட்டு

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வரும் எழுத படிக்க தெரியாத பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களின் ஏ.டி.எம் கார்டு மற்றும் ரகசிய குறியீடு எண்ணை பெற்றுவிட்டு அவர்களிடம் வேறொரு ஏ.டி.எம் கார்டு கொடுத்து அனுப்பி விட்டு உடனடியாக வேறு பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் முழு பணத்தையும் திருடி பலரை ஏமாற்றி வந்த பலே திருடனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி மாரண்டஅள்ளியை சேர்ந்த பால் ஊற்றும் தொழிலாளி நந்தகுமார் மனைவி சரஸ்வதி (வயது 40) என்பவர் மாரண்டஅள்ளி அங்குள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்தார். அவரையும் பலே திருடன் ஏமாற்றி அவரது கணக்கில் இருந்து ரூ.6 ஆயிரத்து 900-ஐ திருடினார்.

கைது

இதையறிந்த சரஸ்வதி மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அதன்பேரில் நேற்று போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மாரண்டஅள்ளியில் உள்ள ஒரு ஏ.டி.எம். அருகே சந்தேகபடும் வகையில் நின்ற ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் மற்றும் போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரதியார் நகரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ரவி (36) என்பதும், ஏ.டி.எம். திருட்டில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்பு கொண்டார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story