ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது
ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
சிவகங்கை
சிவகங்கை தெப்பக்குளம் அருகே விவேகனந்தன் (வயது 42) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த 2 பேர், 400 ரூபாய் மதிப்புள்ள உணவை பார்சல் வாங்கினர். பார்சலை கட்டி கொடுத்த உரிமையாளர் விவேகனந்தன் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் பணம் கொடுக்க மறுத்ததுடன் விவேகனந்தனை தகாத வார்த்தைகளில் திட்டி கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரை தாக்கினார்களாம். அத்துடன் ஓட்டலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இது குறித்து விவேகனந்தன் சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சக்தி என்ற சக்தி ராஜன் (37), கணேஷ்குமார் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.