அரசு வேலை கிடைத்ததும் காதலித்த பெண்ணுடன் பேச மறுத்தவர் கைது


அரசு வேலை கிடைத்ததும் காதலித்த பெண்ணுடன் பேச மறுத்தவர் கைது
x
தர்மபுரி

மொரப்பூர்

மொரப்பூர் அண்ணல் நகரை சேர்ந்தவர் தனசீலன். இவரது மகன் பிரபாகரன் (வயது 35). இவர் போட்டித்தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அப்போது போட்டி தேர்வுக்கு வந்த பெண்ணுக்கும், பிரபாகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு தினமும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து காதலர்கள் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது பிரபாகரன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபாகரனுக்கு அரசு வேலை கிடைத்ததால் அந்த பெண்ணுடன் பேசுவதை தவித்து வந்துள்ளார். அந்த பெண் பிரபாகரன் செல்போனை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை. இதனால் அந்த பெண் அரூர் துணை போலீஸ் சூப்பரண்டு புகழேந்தியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தார்.


Next Story