மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). புளி வியாபாரி. இவர் நேற்று மாலை மாரண்டஅள்ளி முன்சீப் தெருவில் உள்ள நண்பர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. விசாரணையில் மாரண்டஅள்ளி அருகே ஏழு குண்டூர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (33) மற்றும் அகரம் பகுதியை சேர்ந்த விஜய் (30) என்பதும் இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.