விடுதி உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
விடுதி உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
சாயல்குடி,
விருதுநகர் மாவட்டம் பூலாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது யாசர் அராபாத் (வயது 43). இவர் சாயல்குடியில் தனியார் விடுதி நடத்தி வருகிறார். இவரது தனியார் விடுதிக்குள் சென்ற திருச்சுழி அருகே உள்ள செம்மண் நெறிஞ்சி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன், வீரசுரன் (30), சாயல்குடி அருகே உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், சேதுபதி (25) ஆகியோர் கையில் வாள் வைத்து முகம்மது யாசர் அராபாத்தை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து வீரசுரன், சேதுபதி ஆகியோரை கைது செய்தார்.
Related Tags :
Next Story