பஸ் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது


பஸ் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 7:00 PM GMT (Updated: 20 Jun 2023 8:08 AM GMT)

பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் மது போதையில் பட்டாக்கத்தியுடன் ஒருவர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற வேலூர் போலீசார் மதுபோதையில் பட்டாக்கத்தியுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த பக்ரி மகன் முத்து (வயது 31), சமையல் தொழிலாளி என்பது தெரியவந்தது. இவர் வேலூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் தகாத உறவு வைத்திருந்ததால் அடிக்கடி இப்பகுதிக்கு சென்று வந்தார்.

கடந்த சில நாட்களாக முத்து செல்போனில் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றபோது அப்பெண் போனை எடுக்கவில்லையாம். இதனால் அந்த பெண்னை பார்ப்பதற்காக நேற்று வேலூருக்கு மதுபோதையில் வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு பெரிய பட்டாக்கத்தி மற்றும் ஒரு சிறிய கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

மேலும் அவர் எதற்காக பட்டாக்கத்தியுடன் வந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story