கர்நாடகாவில் இருந்து பென்னாகரத்திற்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது


கர்நாடகாவில் இருந்து பென்னாகரத்திற்கு மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2023 1:00 AM IST (Updated: 21 Jun 2023 7:41 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு போலீசார், பைபாஸ் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ராயக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பென்னாகரம் அருகே மோட்டுப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்ததது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 60 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story