சந்தன கட்டைகள் கடத்திய 3 பேர் கைது


சந்தன கட்டைகள் கடத்திய  3 பேர் கைது
x

அமராவதி வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்

அமராவதி வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரோந்து பணி

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

அவற்றுக்கான உணவு மற்றும் நீராதாரத்தை ஆய்வு செய்யவும் வனப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நாள்தோறும் உடுமலை மற்றும் அமராவதி வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ்ராம் மேற்பார்வையில் அமராவதி வனச்சரக அலுவலர் எஸ்.சுரேஷ் தலைமையில் வனவர் செந்தில்முருகன், வனக்காப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், மனோஜ் உள்ளிட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் அமராவதி வனச்சரகம் மஞ்சம்பட்டி பிரிவு அரளிப்பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

சந்தன கட்டைகள்

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்கள் நடமாட்டம் இருந்தது. அவர்களை வனத்துறையினர் பிடித்து சோதனை செய்தபோது சந்தன கட்டைகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து வனத்துறையினர் மூவரையும் அழைத்து வந்து வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கேரளா மாநிலம் காந்தளூர் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (வயது 37), பால்ராஜ் (43), சக்திவேல் (38) என்பதும், சட்டவிரோதமாக சந்தன கட்டைகளை கடத்தி வந்தததையும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 12.800 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story