கொலை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட வாலிபர் கைது
கொலை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொலை வழக்கில் பிடிவாரண்டு
விழுப்புரம் வி.மருதூர் மேல்வன்னியர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் வினோத்குமார் (வயது 31). இவர் கடந்த 2020-ல் விழுப்புரம் தாலுகா போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதன் வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு விசாரணையின்போது வினோத்குமார் ஆஜராகி வந்தார்.
கடந்த 15.3.2022-க்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
வாலிபர் கைது
இந்நிலையில் வினோத்குமாரை விழுப்புரம் தாலுகா போலீசார், பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற வினோத்குமாரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.