சேலத்தில் சொத்து தகராறில் தம்பி கொலை:தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில் சொத்து தகராறில் தம்பி கொலை:தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 6 July 2023 1:46 AM IST (Updated: 6 July 2023 5:43 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சொத்து தகராறில் தம்பி கொலை:தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

சேலம்

சேலம்

சேலம் செங்கலணை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). கூலித்தொழிலாளி. அவரது தம்பி ராஜகணபதி. இவர்களிடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த மே மாதம் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜகணபதியை கட்டையால் தாக்கி செல்வம் கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து செல்வத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story