திருத்தணியில் போலீஸ் உடையில் வந்து வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது


திருத்தணியில் போலீஸ் உடையில் வந்து வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது
x

திருத்தணியில் போலீஸ் உடையில் வந்து வாலிபரிடம் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர்

திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 20). கடந்த 8-ந் தேதி வேலை நிமித்தமாக உதயகுமார் திருத்தணிக்கு வந்தார். பின்னர் வேலை முடிந்ததும் வீடு திரும்புவதற்காக எம்.ஜி.ஆர். நகர் ரெயில்வே மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு போலீஸ் உடையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் உதயகுமார் மோட்டார் சைக்கிளை மடக்கி, அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து உதயகுமார் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தியதில் உதயகுமாரை போலீஸ் உடையில் வழிமறித்து செல்போனை பறித்துச் சென்ற சென்னை வேளச்சேரி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (42)என்பது தெரிந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story