வீடு புகுந்து நகை-பணம் திருடியவர் கைது

தூத்துக்குடியில் வீடு புகுந்து 3½ பவுன் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் வீடு புகுந்து 3½ பவுன் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருட்டு
தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்தவர் பூலி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 38). இவர் கடந்த 12.1.23 அன்று வீட்டை பூட்டி சாவியை ஜன்னலின் மேல் பகுதியில் வைத்து விட்டு வெளியில் சென்று விட்டாராம்.
மீண்டும் வீட்டுக்கு வந்த போது யாரோ மர்ம நபர், சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 3½ பவுன் தங்க சங்கிலி, ரூ.17 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
கைது
இதுகுறித்து முத்துலட்சுமி தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி அம்பேத்கர்நகரை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் சந்தனராஜ் (22), சந்திரன் மகன் அருள்ராஜ், சேகர் மகன் சந்திரன் ஆகியோர் சேர்ந்து திருடி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து ½ பவுன் தங்கசங்கிலியையும் பறிமுதல் செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.