ஆணவம் தி.மு.க.வின் பிறவி குணம் - அண்ணாமலை
அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. 30 சதவீத மகளிருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்குகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
"தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது வெறும் 30 சதவீத மகளிருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது.
எனக்கு ஏன் ஆயிரம் ரூபாய் நீங்கள் வழங்கவில்லை என்று ஒரு சகோதரி முதல்வரை இன்று கேள்வி கேட்டுள்ளார். நீங்கள் இந்த கேள்வியை கேட்பதே தவறு என்று அந்த சகோதரியிடம் மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.
இந்த ஆணவம் தி.மு.க.வின் பிறவி குணம். தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் தி.மு.க.வை இந்த தேர்தலில் முழுமையாக நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story