கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம்


கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே கலைஞர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு சிறப்பு முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

கடலூர்

சிறப்பு முகாம்

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக விண்ணப்ப பதிவு முகாம்கள் ஏற்கனவே நடந்தது. இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர இயலாத குடும்ப தலைவிகள் விண்ணப்பம் பதிவு செய்ய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த சிறப்பு முகாம் கடலூர் மாவட்டத்தில் நேற்று 1,416 இடங்களில் நடைபெற்றது. இதில் விடுபட்ட பெண்கள், அதாவது குடும்ப தலைவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

கலெக்டர் ஆய்வு

கடலூர் அருகே அன்னவல்லியில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கடலூர் வட்டம், வழிசோதனைப்பாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கி வரும் அன்னவல்லி ரேஷன் கடையில் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்து, பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும் நடக்கும் சிறப்பு முகாம்களையும் விடுபட்ட குடும்ப தலைவிகள் பயன்படுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும் கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார்.


Next Story