கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் முகாம்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் முகாம்
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறும் முகாமை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் அடுத்த மாதம்(செப்டம்பர்) 15-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து இந்த திட்டத்துக்கான பயனாளிகளை தோ்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் தகுதி உள்ள பெண்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருக்கோவிலூர் அரசு அங்கவை, சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் இருந்தவர்களிடம் அரசு அறிவித்துள்ள உத்தரவின் அடிப்படையில் தகுதி உள்ள ஒரு நபர் கூட விடுபடாமல் விண்ணப்பங்களை கேட்டு பெற வேண்டும். தகுதி உள்ளவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக செயல்பட்டு இந்த உரிமைத்தொகை உரியவர்களுக்கு கிடைக்கும் வகையில் பாடுபட வேண்டும். அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார். அப்போது விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஆணையாளர் கீதா, துணைத்தலைவர் உமா மகேஸ்வரி குணா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story