கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கும் பணி
கல்வராயன்மலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கும் பணியை பழங்குடியினர் திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
கச்சிராயப்பாளையம்
கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை கிளாக்காடு தொரடிப்பட்டு மணியார்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கண்டிக்கல், மேல்மொழிபட்டு, பொட்டியம், தாழ்வாழப்பாடி, தாழ்வெள்ளார், எழுத்தூர், மணியார்பாளையம், முண்டியூர், தொரடிப்பட்டு, வாரம், ஆனைமடுவு, மூலக்காடு, பெரம்பூர், குரும்பலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மகளிர்களுக்கு முதற்கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பபடிவங்கள் வழங்கும் பணி கல்வராயன் மலை தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இதை மாவட்ட பழங்குடியினர் திட்ட இயக்குனர் கதிரவன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இதில் 4 ஊராட்சிகளை சேர்ந்த 8,334 மகளிர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்வராயன்மலை தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன், தனி தாசில்தார் வாசுதேவன், தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடேசன், தேர்தல் துணை தாசில்தார் நீலாவதி மற்றும் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.