திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி அருணாசலேஸ்வரர் இன்று கிரிவலம்..!


திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி அருணாசலேஸ்வரர் இன்று கிரிவலம்..!
x
தினத்தந்தி 28 Nov 2023 6:57 AM IST (Updated: 28 Nov 2023 7:12 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து 2-வது நாளில் அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது.

மகா தீபத்தை காண வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் நடந்து கிரிவலம் சென்றனர். மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.

கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் பக்தர்களை போன்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் மகா தீபம் ஏற்றப்பட்டு உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருகிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story