இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் போரூர் பெண்கள் பள்ளியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்


இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் போரூர் பெண்கள் பள்ளியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்
x

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

போரூர்,

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 151-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் போரூர் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் இந்த பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மழைநீருடன் வகுப்பறைக்குள் கழிவுநீரும் தேங்கி உள்ளது. மின் மோட்டார்கள் வைத்து மழை நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புயல் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று(திங்கட்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் போரூர் பெண்கள் பள்ளியில் தேங்கி உள்ள மழைநீர் இன்னும் வடியவில்லை.

இரவுக்குள் மழைநீர் வடிந்தாலும் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக இருக்கும் என்பதால் அறிவித்தபடி இன்று பள்ளிக்கூடம் திறக்கப்படுமா? என மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story