சிறுவன் மீது தாக்குதல்


சிறுவன் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிறுவன் மீது நடந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே கீழப்பட்டில் தெருகூத்து நடந்தது. இதைபார்த்து கொண்டிருந்த 14 வயதுடைய சிறுவனுக்கும், 16 வயதுடைய சிறுவனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் 16 வயதுடைய சிறுவன் 14 வயதுடைய சிறுவனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த அந்த சிறுவன் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்த புகாரின் பேரில் 16 வயதுடைய சிறுவன் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story