தம்பதி மீது தாக்குதல்; தந்தை-மகன் மீது வழக்கு
தம்பதி மீது தாக்குதல் தொடர்பாக தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நரியங்குழி தெற்குத்தெருவை சேர்ந்தவர் சந்திரா(வயது 31). அதே பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(60). இவர்கள் 2 பேரின் குடும்பத்தினருக்கு இடையே நிலம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலாயுதம் மற்றும் அவரது மகன் ராஜா(26) ஆகிேயார் சந்திராவின் வீட்டிற்கு எதிரே நின்று சந்திராவை பார்த்து நிலப்பிரச்சினையை கூறி திட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சந்திரா மற்றும் அவரது கணவர் வெங்கடாஜலபதி ஆகியோர் எங்களை திட்டக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, தட்டிக்கேட்ட சந்திரா, வெங்கடாஜலபதி ஆகியோரை திட்டி, தாக்கியுள்ளார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் சந்திரா அளித்த புகாரின்பேரில் வேலாயுதம், ராஜா ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.